ஈபிஆர்எல்எப் கட்சியில் கிளிநொச்சி கிளையினரின் நிர்வாக தெரிவு இன்று இடம்பெற்றது.

breaking
ஈபிஆர்எல்எப் கட்சியில் கிளிநொச்சி கிளையினரின் நிர்வாக தெரிவு இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த சுட்டத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்களிற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் தெளிவூட்டினார். இதன்போது, புதிய அரசியலமைப்பு விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும், நேற்றய தினம் சுமந்திரன் அவர்கள் அரசியலமைப்பை கொண்டு வருவதில் தமக்கு நம்பிக்கை இருப்பதானதொரு கருத்தை தெரிவித்திருந்ததாகவும். ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இது பௌத்த நாடு, பௌத்தத்திற்கே முன்னுரிமை என்ற நிலைப்பாட்டில் உள்ள அதே நிலையில், மகிந்த ராஜபக்ச புதிய அரசியலமைப்பை கொண்டுவர விடமாட்டோம். அதற்கு முன்னர் தேர்தலை நடார்த்துங்கள் என குாரி வருவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் எவ்வாறு புதிய அரசியலமைப்பு கொண்டு வர முடியும் என்பது தொடர்பில் இன்று கருத்துரையாடப்பட்டதாகவும், இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் மக்களை தெளிவு படுத்தும் கூட்டங்கள் ஊடாக கிராம மட்டங்களில் தெளிவு படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
ஊடக சுதந்திரம் தொடர்பில் பாராளுமன்றிலும், வளியிலும் கூறிக்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க அவர்களின் காலத்தில்தான் பாரிய ஊடக அடக்குமுறை நிகழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றய தினம் சுமந்திரன் அவர்கள் ஊடகங்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.