ஜெனீவா தீர்மானம் மைத்திரி அதிரடி !

breaking
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை வழங்கிய இணை அணுசரணையை விலக்கிக்கொள்வது குறித்து சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன மார்ச் மாதம் ஐநா அமர்வு இடம்பெறவுள்ள நிலையிலேயே சிறிசேன இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தனது இணை அனுசரனையை விலக்கிக்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டினை  இனப்படுகொலையாளன்  ராஜபக்ச ஆதரவு சிறிலங்கா பொதுஜன பெரமுன பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கவேண்டாம் என அவ்வேளை ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியாக பணியாற்றிய தற்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசின்ஹ கேட்டுக்கொண்டதாகவும்  எனினும் அவ்வேளை வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட மங்கள சமரவீர இந்த ஆலோசனையை புறக்கணித்து தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கினார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது இதனை உறுதிசெய்வதற்காக மங்கள சமரவீரவை தொடர்புகொள்ளமுயன்றவேளை அது பலனளிக்கவில்லை என  அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.