தமிழ்ப் பாடசாலையை முஸ்லீம் பாடசாலை மாற்ற திட்டம்

breaking
இந்து மாண­வர்­கள் தமது மத, கலா­சார சூழ­லில் கல்வி கற்­கும் நோக்­கு­டன் உரு­வாக்­க­பட்ட அநு­ரா­த­பு­ரம் விவே­கா­னந்தா தமிழ் மகா­வித்­தி­யா­ல­யம் முஸ்­லிம் பாட­சா­லை­யாக மாற்­றும் நீண்­ட­கா­லத் திட்­டத்தை தடுத்து நிறுத்­து­மாறு அநு­ரா­த­பு­ரம் விவே­கா­னந்தா சபை­யின் தலை­வ­ரும் பாட­சா­லை­யின் முன்­னாள் அபி­வி­ருத்­திச் சங்­கச் செய­ல­ரு­மான வி.ஞான­சந்­தி­ரன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: 1985ஆம் ஆண்டு வரை சிறப்­பா­கச் செயற்­பட்ட பாட­சாலை, 1985ஆம் ஆண்டு இடப்­பெ­யர்­வால் மூடப்­பட்­டது. முஸ்­லிம் அதி­பர், ஆசி­ரி­யர் குழாத்­து­டன் பாட­சாலை மீள ஆரம்­பிக்­கப்­பட்­டது. இந்து தமிழ் மாண­வர்­க­ளின் நலன்­காக்க யாரு­மற்ற நிலை­யில் சிறிது, சிறி­தாக பாட­சாலை நிர்­வா­கத்­தால் எமது மாண­வர்­க­ளுக்கு அநீ­தி­கள் இழைக்­கப்­பட்­டது. இந்­துக்­கள் பலர் மத­மாற்­றத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர். பாட­சா­லை­யின் நிர்­வா­கம் வர­லா­று­களை அழித்து, சபை மற்­றும் கதி­ரே­சன் ஆல­யத்­து­ட­னான தொடர்­பு­க­ளைத் துண்­டித்து முஸ்­லிம் பாட­சா­லை­யாக மாற்­றும் நோக்­கு­டன் செயற்­பட்டு வரு­கின்­றது. எமது சபை, கதி­ரே­சன் ஆல­யம், விவே­கா­னந்தா வித்­தி­யா­லம் ஆகிய மூன்­றும் ஒரே நேர்­கோட்­டி­லேயே அமைந்­துள்­ளன. தற்­போ­தைய நிர்­வா­கம் வர­லாறு தெரி­யாத இந்து தமிழ்ப் பெற்­றோர்­களை மூளைச் ­ச­லவை செய்து விவே­கா­னந்தா சபை மற்­றும் ஆல­யத்­து­ட­னான தொடர்­பு­க­ளைத் துண்­டித்­து ­வ­ரு­கி­றது. இந்து மாண­வர்­க­ளுக்­கும் விவே­கா­னந்தா சபைக்­கும் அநீதி ஏற்­ப­டும் போது பிக்­கு­கள், சிங்­கள அறி­ஞர்­கள், அர­சி­யல்­வா­தி­கள் எமக்கு உத­வி­வ­ரு­கின்­ற­னர். தற்­போ­து­வரை இந்­து­மத விடு­முறை நாள்­க­ளில் பாட­சாலை நடாத்­த­ப­டு­கின்­றது. வீபூதி பூசு­வ­தற்கு அனு­ம­தி­ம­றுக்­க­ப­டு­கின்­றது. இந்­து­ச­மய வழி­பா­டு­க­ளுக்குத் தடை­வி­திக்­க­ப­டு­வ­து­டன், இந்­து­ச­ம­யம் கற்­பிப்­ப­தற்கு வகுப்­பறை கொடுக்­கா­மல் மரங்­க­ளின் கீழேயே நடை­பெற்­று­வ­ரு­கி­றது. விவே­கா­னந்­தன் என்ற பெய­ரில் இருந்த சஞ்­சி­கை­யின் பெயர் விவேகி என்று மாற்­ற­பட்­டது. விவே­கா­னந்­த­ரின் படம் அகற்­ற­பட்­டது. இந்து மாண­வர்­கள் பர்தா அணி­விக்­க­பட்­டார்­கள். சிவ­ராத்­திரி தினத்­தில் விளை­யாட்­டுப் போட்டி நடை­பெற்­றது. பாட­சா­லை­யில் கற்­பிக்­கும் 11 தமிழ் ஆசி­ரி­யர்­க­ளும் கதி­ரே­சன் ஆல­யத்­துக்கு வரு­வ­தில்லை. அவர்­க­ளுக்கு தடை­வி­திக்­க­ப­டு­வ­தாக உணர்­கின்­றோம். இது அநீ­தி­யான செயற்­பாடு. தற்­போது எமது முயற்­சி­யின் விளை­வாக வவு­னி­யா­வி­லி­ருந்து இந்து அதி­பரை பாட­சா­லைக்கு நிய­மித்­தோம். எனி­னும் அவ­ரைப் பிரதி அதி­ப­ரா­கவே மாகா­ணக் கல்­வி­ப­ணிப்­பா­ளர் அங்கு நிய­மித்­துள்­ளார். எமது பிரச்­சி­னை­களை அனை­வ­ரும் புரிந்­து­கொள்­ள­ வேண்­டும் -– என்­றார்.