யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர்  விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்.

breaking
  யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளாமல் அமைக்கப்பட்ட கேபிள் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். அதனை  அகற்றும் பணிகளில்  நாங்கள் ஈடுபட்டுக்  கொண்டிருந்த போது  சம்பவ  இடத்திற்கு  வந்த சிலர்   நாங்கள்    ஒரு நிறுவனமென்றும்  அனுமதிகள்  பெற வேண்டிய  இடத்தில் அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் மாநகர சபையிடம்  அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்திருந்தனர். சபை எல்லைக் குட்பட்ட பகுதிகளில் அமைப்பதற்கு சபையின் அனுமதி பெறப்பட வேண்டுமென்று நாங்கள் தெரிவித்திருந்தோம். இல்லையென்று வாதிட்டவர்கள் நாங்கள் செய்வது தவறு என்றும் தாம் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் கூறிச் சென்றிருந்தனர். இதன் பின்னணியில் யாழ் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் எமக்கு எதிராக முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காகவே நாளை யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.