சிங்கள முகவரான ஆளுநரை அழைத்து தமிழ்த் தேசிய பொங்கல் கொண்டாடிய யாழ் இந்துக் கல்லூரி !

breaking
தமிழர் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சமூகத்தினரால் இன்று தமிழர் கலாச்சார நிகழ்வுகளுடன் கூடிய பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் தீடிரென்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்து கொண்டார். அவருடன் பௌத்த துறவி ஒருவரும் வருகை தந்திருந்தார். இன்றைய பொங்கல்விழாவை வடமாகாண ஆளுநரும் சிங்கள அரசின் முகவருமான சுரேன் ராகவன் கொடி அசைத்து தொடங்கி வைக்க யாழ் இந்துவின் தமிழ்த் தேசிய பொங்கல் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. இன்றைய நிகழ்விற்கு ஆளுநர் அழைக்கப்படுவார் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. அது இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்து. இன்று ஆளுநர் பாடசாலைக்கு வரும் வரையில் அந்த விடயம் மிக இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. தங்களின் அரசியல் செல்வாக்கை காட்ட முனைந்த ஒரு சில பழைய மாணவர்களே ஆளுநரை அழைத்து வந்து நிகழ்வை குழப்ப முனைந்ததாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் மாவீரர்களின் தியாகத்தால் எழுதப்பட்ட யாழ் இந்து அன்னையின் வரலாற்றுக்கு களங்கம் ஏற்படாத வரையில் இனி வரும் காலங்களில் பாடசாலை சமூகம் நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.