Take a fresh look at your lifestyle.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் துணைமேயர் வேட்பாளர் மீது தாக்குதல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேயர் வேட்பாளரும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவருமான தீபன்திலீசன் மீது இன்று மாலை 6.45 மணியளவில் யாழ்ப்பாணம் பஸ்ரியன் சந்தியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யாழ்ப்பாணம் பஸ்ரியன் சந்தியில் உள்ள நகைக்கடை ஒன்றின் முன்னால் நின்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் துணைமேயர் வேட்பாளரும், இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவருமான தீபன்திலீசுன் என்பவர் மீது இன்று பிற்பகல் 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ மற்றும் கார் என்பனவற்றில் வருகை தந்த 20 பேர் கொண்ட குழு அவர் மீது கொட்டன்களால் தாக்குதல் நடத்தியதுடன் சம்பவ இடத்தில் சுமார் 1 மணித்தியாலங்கள் வரை நின்று அட்டகாசம் புரிந்துள்ளது. உடடினயாகவே பொலிஸாரிற்கு அறிவிக்கப்பட்ட போதும் 40 நிமிடங்களின் பின்னரே இரு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்தனர். பொலிஸார் வருகை தந்தும் குறித்த தாக்குதலாளிகள் அந்த இடத்தை விட்டு அகலாமல் தொடர்ந்து அட்டகாசம் புரிந்துள்ளனர். பின்னர் பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்த சமயம் அவர்கள் அங்கிருந்து அகன்றுள்ளனர். அதன் போது அவர்கள் வருகை தந்த காரின் சாவி கடைக்குள் சிக்கியுள்ளதால் காரை விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

அதன்பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொலிஸாருடன் கடுமையாக முரண்பட்டதை தொடர்ந்தும் பொலிஸார் குறித்த இடத்திற்கு வரவில்லை. அதனால் தாக்குதலில் காயமடைந்த இருவரும் யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடுகளை பதிவுசெய்தனர். அதனைத் தொடர்ந்து தீபன்திலீசன் சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலாளிகள் வருகைதந்த கார் சான்றுப்பொருளாக யாழ் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

 

%d bloggers like this: