அச்சுவேலியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல்!

breaking

கனியவளம் மற்றும் சுரங்க அகழ்வு பணியக அதிகாரிகளின் அசமந்த போக்கும், சுண்னாம்பு கல் அகழ்வதற்கு வழங்கப்படும் அனுமதிபத்திரம் இழுத்தடிப்பு செய்து கொடுப்பதாக வலிகாமம் பகுதியில் சட்டவிரோத சுண்னாகம்பு கல் அகழ்வு அதிகரித்து செல்வதாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்படுகிறது.

அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் இவ்வாறு சட்டவிரோத சுண்னாம்பு கல் அகழ்வு அதிகரித்து செல்வது தொடர்பிலே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

 சிறுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத சுண்னாம்பு கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த உழவு இயந்திரத்தினை பொலிஸார் கைபெற்றியிருந்தனர்.

இதனை தொடர்ந்து பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன்,

கைபெற்றிய உழவு இயந்திரத்தினை பொலிஸார் அச்சுவேலி பொலிஸ் நிலையம் எடுத்து வர முற்பட்ட போது இந்த முறுகல் நிலை இடம்பெற்றது.

கூலி வேலை செய்து தமது அன்றாட பிழைப்பினை நடத்தி வரும் இந்த பகுதி மக்கள் சுண்னாம்பு கல் அகழ்வதற்கு மாவட்ட செயலகத்தில் விண்ணப்பித்தால் ஆறு மாதங்களின் பின்னரே அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் தாம் அன்றாட பிழைப்பிற்காக கல் அகழ்வில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். நாளாந்தம் 1,000 ரூபாவிற்கு கூலி வேலை செய்யும் தங்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் Nபுhது 50ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தங்களை மீளவும் கடன்காரர்களாக்கி பொருளாதரத்தின் அடிமட்ட நிலைக்கு கொண்டு செல்வதற்கு பொலிஸார் முற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மாவட்ட செயலகத்தில் உள்ள கனிவளங்கள் மற்றும் சுரங்க பணியக அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து அனுமதி வழங்குவதால் தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.