காணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக தொடங்க வேண்டும்! - துரைராஜசிங்கம்

breaking

காணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக தொடங்க வேண்டும் மக்களுக்கு சிறந்த சர்வதேச நியமங்களுக்கு அமைவான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என தமிழரசு கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வாக்கு வங்கியின் சரிவு தொடர்பில் ஆராயும் குழுக்கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.

இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்

ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழரசு கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி அங்கத்தவர்கள் உள்ளிட்ட வர்கள் வாங்கு வங்கியின் சரிவு தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்கள்.

இதில் நாடாளமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான ஆ.புவனேஸ்வரன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் ,வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தமிழ்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையேயான கருத்துக்களை கேட்டறிந்துள்ளார்கள்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழரசு கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அவர்கள் கால ஒட்டத்திற்கு எற்ப கட்சியினை வடிவமைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்ற வகையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு இப்போது இருக்கின்ற நாட்டின் அரசியல் நிலைக்கு ஏற்ப தன்னை வளப்படுத்திக்கொள்ள முடியும் என்பதை மக்களை சந்தித்து அடித்தளத்தில் இருந்து அவர்களின் அபிப்பிராயங்களை அறிந்து கட்சியின் அடுத்த கட்டமைப்பு தொடர்பில் யோசிக்கவேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்தியகுழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் மாவட்டடம் தோறும் மக்கள் சந்திப்பினை மேற்கொள்ள தொடங்கியுள்ளோம் முதல் சந்திப்பு திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது இரண்டாவது சந்திப்பு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று 05.03.18 காலை பத்து மணிதொடக்கம் இரவு 7 மணிவரை நடைபெற்ற இந்த சந்திப்பில்

மக்கள் ஆர்வத்துடன் வந்து கூட்டமைப்பில் மக்கள் கொண்டுள்ள ஈடுபாட்டினை மக்கள் தெளிவாக சொன்னார்கள் உண்மையில் கூட்டமைப்பின் செயற்பாட்டின் பால் மக்கள் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் இடையில் ஏற்பட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நாடு முழுவதிலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடைமுறை புதிய நடைமுறை மிககுறைந்த வாக்குக்களை பெற்றவர்கள் ஆசனத்தை பெற்றுள்ளார்கள் முழு வட்டாரத்தை பெற்றவர்கள் கூட தனித்து ஆட்சி அமைக்கமுடியாத நிலை இருக்கின்றது இத்தகைய சூழ்நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் நாட்டில் பலர் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள் நாங்கள் மக்களை நேரடியாக சென்று சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம் இது சிறந்த பெறுபேற்றினை தந்துள்ளது

நாளை 06 வவுனியாவில் இவ்வாறான சந்திப்பினை ஏற்படுத்தவுள்ளோம் தொடர்ச்சியாக வடக்கில் இவ்வாறான சந்திப்புக்களை மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை ஒரு புதிய உற்சாகத்துடன் செயற்படுத்துகின்ற வகையான திட்டங்களை தீட்டிக்கொண்டு தொடர்ந்து தமிழ்மக்களின் இலக்கினை அடையக்கூடிய வகையில் எங்களை நாங்கள் நெறிப்படுத்தி செல்லக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபடஉள்ளோம் அந்த செயற்பாட்டின் தொடக்கம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இடையில் ஊடகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அதாவது காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு எவ்வாறானதாக அமையும் என்று கேட்டதற்கு.

காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலம் கொண்டுவரப்படவேண்டும் என்றும் அது ஆரோக்கியமான விதத்தில் செயற்படுத்த வேண்டும் என்பதிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிக அக்கறையாக இருந்துள்ளது காணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக தொடங்க வேண்டும் மக்களுக்கு சிறந்த சர்வதேச நியமங்களுக்கு அமைவான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும் இது இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜெனீவா தீர்மானத்தை ஒட்டியதாக இருப்பதாக மக்களால் உணரப்படுகின்றது அவ்வாறு இல்லாமல் இன்னும் ஓராண்டு கால அவகாசத்தை வேண்டி நிக்கின்ற இலங்கை அரசாங்கம் மிக அத்தபுஸ்டியுடன் செயற்பட்டு இந்த நாட்டினை ஒரு புதிய தளத்திற்கு கொண்டுவரவேண்டிய அவசியம் இருக்கின்றது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் மிகவும் அர்த்த புஸ்டியா செயற்பட வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.