முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் சிறப்பு பிரார்தனைகள் வழிபாடுகள்!

breaking

வட தமிழீழம் ,முல்லைத்தீவு அளம்பில் கடற்கரைப்பகுதியில் அதிகரித்து செல்லும் ஜெலிபிஸ் காரணமாக கடற்தொழில் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இன்னிலையில் கடல் அன்னையினை வேண்டி சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டுள்ளார்கள். கடந்த மாதம் 31 ஆம் திகதி குறித்த அளம்பில் பகுதியில் கரைவலை தொழிலினை கடற்தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளார்கள் இதன்போது கரைவலையில் ஜெலிபிஸ் எனப்படும் கடல் பாசி ஒன்றே வலைகளில் அதிகமாக பட்டுள்ளது. இது உடலில் பட்டால் பாரிய கடியினை ஏற்படுத்தும் இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கடலில் வருவதாகவும் இதன் வரத்தால் கடலில் மீன்களின் வரத்து குறைவடைந்து செல்வதாகவும் மீனவர்கள் கவலை தெரவித்துள்ளார்கள்.

இன்னிலையில் இதனை கடலில் இருந்து நீக்க கோரி உப்பு மாவெளிபகுதியில் உள்ள காணி கோவிலுக்கும் அளம்பில் பகுதியில் உள்ள வேளாங்கண்னி ஆலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இதில் அளம்பில் பங்குந்தந்தை தயாபரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கடல் அன்னைக்கு சிறப்பு ஆசிர்வதிப்பும் கரையோர மக்களின் தொழிலுக்கு வழிவிடகோரி சிறப்பு வழிபாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.