மாணவனை தாக்கி காயப்படுத்தி  அட்டகாசம் செய்த கும்பல்:  விளையாட்டுப்போட்டி இரத்து

breaking
  தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் விளைவால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (30) பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இடம்பெறவிருந்த நிலையில் அதக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது பாடசாலைக்குள் புகுந்து குழுவென்றினால் மாணவன் ஒருவன் தாக்கப்பட்டதோடு, ஆசிரியர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு இரவு பதினொரு மணிக்கு பாடசாலைக்கு காவல்துறையினர் வருகை தந்து ஆசிரியர்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் நேற்று காலை பாடசாலை முதல்வர் பெற்றோர்களை அழைத்து கலந்துரையாடியதோடு, வலயக் கல்வித் திணைக்களத்துடனும் கலந்துரையாடி மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் எடுத்து இடம்பெறவிருந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகளை இரத்துச் செய்துள்ளார். இல்லங்கள் அலங்கரிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் வினையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டமை மாணவர்களை மனதளவில் பாதித்திருக்கிறது. மாணவனுக்கு அச்சுறுத்தல் ஏற்ப்பட்ட சந்தர்ப்பத்திலேயே உரிய தரப்பினர்கள் விரைந்து நடவடிக்கைகளில் இறங்கியிருந்தால் இந்த நிலைமை -ஏற்பட்டிருக்காது என சமூக ஆர்வலர்கள்குற்றம் சாட்டியுள்ளனர். அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் இதுவரைக்கும் மூன்று பெண்களை மாத்திரமே கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.