வெனிசூலாவில் அரசியல் குழப்பம்.!

breaking
வெனிசூலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் குதித்த வேளையில் நாடாளுமன்ற சபாநாயகரும் எதிர்க்கட்சி தலைவருமான ஜூவான் குவைடோ தன்னை அந்நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார். அவருக்கு அமெரிக்கா, கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன.  ஆனால் ஜூவான் குவைடோவின் முடிவை ஏற்க மறுத்த நிகோலஸ் மதுரோ அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். ஜூவான் குவைடோ வெனிசூலாவை விட்டு வெளியேற அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. மேலும் அவரது சொத்துகளையும் முடக்கியது. இந்த நிலையில், தன்னை பயமுறுத்துவதற்காக அதிபர் நிகோலஸ் மதுரோ தனது குடும்பத்தை மிரட்டுவதாக ஜூவான் குவைடோ குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில் “பாதுகாப்பு படை வீரர்கள் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எனது மனைவியிடம் விசாரணை நடத்துவதாக கூறி அவருக்கு மிரட்டல் விடுத்தனர். நிகோலஸ் மதுரோ சர்வாதிகார ரீதியில் என்னையும், எனது குடும்பத்தையும் அச்சுறுத்துகிறார்’ என தெரிவித்தார்.