கஞ்சாவை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் இடைத்தரகர்களான ஶ்ரீலங்கா காவல்துறையினர்

breaking
வடதமிழீழம், யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலங்களில் அதிகளவான கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டு வருகின்ற நி‍லையில் அவற்றை கண்டுபிடித்து முழுமையாக இல்லாதொழிக்கும் வகையில் கஞ்சா ஒபரேசன் என்ற நடவடிக்கையை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். குறித்த நடவடிக்கைக்காக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில் கடமையாற்றும் காவல்துறையினரையும் பொலிஸாரையும் உள்ளாக்கியே நேற்றைய தினத்திலிருந்து குறித்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளிலிருந்து கடல் வழியாக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டு பெருமளவிலான கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்தே மேற்படி நடிவடிக்கை ஆரம்பிக்கப்பட்டள்ளது. அத்துடன் இந்தியாவிலிருந்து கடல் வழியாகப் படகுகள் மூலம் யாழ். குடாநாட்டிற்கு கஞ்சா கடத்தப்பட்டு வருவதால், கரையோரப் பகுதிகளான வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, அச்சுவேலி, இளவாலை ஆகிய பகுதிகளிலுள்ள காவல்துறை பிரிவுகளிலே இந் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அளவுக்கதிமாக படைகளை தமிழீழ பகுதி முழுவதும் வைத்திருக்கும் ஶ்ரீலங்கா அரசாங்கம் படைகளின் உதவியுடனேயே போதைப் பொருள் வியாபாரங்களையும் பாவனையையும் ஊக்குவித்து தமிழ் மக்களை அதற்கு அடிமையாக்குவது சொல்லித் தெரியவேண்டிய செய்தி அல்ல