எங்கள் மண்ணில் சொகுசு வாழ்க்கை நாங்கள் அகதி வாழ்க்கை கேப்பாபுலவு மக்கள் குமுறல்!

breaking
எங்கள் மண்ணில் அவர்கள் சொகுசு வாழ்க்கை  நாங்கள் அகதி வாழ்க்கை கேப்பாபுலவு மக்கள் குமுறல்!
கேப்பாபுலவு மக்கள் கறுப்புக்கொடி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 703 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாபுலவு மக்கள் இன்று 02.02.19 ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.
கேப்பாபுலவு படைமுகாமிற்கு முன்னால் அமர்ந்து நில மீட்பு போராட்டத்தினை மேற்கொண்டுவரும் மக்கள் எதிர்வரும் 4ஆம் நாள் இலங்கை சுதந்திர நாளினை தாங்கள் கறுப்பு கொடி கட்டி துக்கநாளாக கவனயீர்ப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
இதுதொடர்பில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போராட்டத்தினை வழிநடத்துபவர்களில் ஒருவரான எஸ்.அரியகலா அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது.
எதிர்வரும் நான்காம் நாள் இலங்கை அரசு 71 ஆவது சுதந்திரதினத்தினை கொண்டாட உள்ளது இரண்டாவது ஆண்டாக நாங்கள் சுதந்திர நாளினை துக்கநாளாக கருதி கவனயீர்ப்பினை மேற்கொண்டு வருகின்றோம்.
அனைத்தினையம் இழந்து வீதியோரமாக இருக்கும் நாங்கள் ஜனநாயக அரசு கொண்டாடும் சுதந்திர நாளினை துக்க நாளாக கறுப்பு பட்டி நாளாக அனுட்டிக்க இருக்கின்றோம் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.
அடுத்து போராட்டத்தினை வழிநடத்துபவர்களில் ஒருவரான இந்திராணி கருத்து தெரிவிக்கும் போது
படையினரின் வாயிலுக்கு முன்பாக போராட்த்தினை நடத்திக்கொண்டிருக்கம் எங்களுக்கு எந்த ஒரு அரச பங்காளர் கட்சிகளோ  அரச ஆதரவாளர்களோ எங்களுக்கு எந்த தீர்ப்பும் வழங்காத நிலையில் நாங்கள் பனியிலும் வெய்யிலிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.
எங்கள் வாழ் இடங்களில் எங்கள் வீடுகளில் குந்தி இருக்கும் படையினரின் குடும்பங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்கள் எங்கள் காணிகளை அபகரித்து எங்கள் வீடுகளில் வாழ்ந்;து கொண்டிருக்கும் சிங்கள படையினர் அவர்கள் குடும்பங்களை காலையில் சொகுசு வாகனங்களில் வேலைக்காக கொண்டுசென்று விட்டு இரவு வேளைகளில் கொண்டுவந்து விடுகின்றார்கள் எங்கள் வீடுகளில் நாங்கள் வழக்கதியற்றவர்களாக வீதிகளில் நிக்கின்றோம் இதனை கண்ணூடாக காண்கின்றோம்.
எங்கள் மண்ணில் அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்கள் நாங்கள் அகதி வாழ்க்கை வாழ்கின்றோம்.
இன்னும் எங்கள் சொந்த நிலத்திற்கு செல்லமுடியாத நிலைதான் நீடிக்கின்றது எங்கள் மண்ணுக்காக நாங்கள் போராடி எங்கள் இடங்களுக்கு செல்லவேண்டும்.
எங்கள் கண்முன்னே படையினர் இலங்கையின் சுதந்திர தினத்திற்கு மின்குமிழ்களை பொருத்தி அலங்கரிக்கின்றார்கள் ஆனால் நாங்கள் கறுத்த கொடி கட்டி எங்கள் துக்க நாளினை அனுஸ்டிக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்து கேப்பாபுலவு போராட்டத்தினை வழிநடத்தும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.பரமேஸ்வரன் கருத்து தெரிவிக்கும் போது  இந்த மக்கள் போராட்டம் மிகவிரைவில் முற்றுபெறுகின்ற போராட்டமாக இருக்கின்றது சுதந்திரதினத்தினை கொண்டடுகின்ற அரசு இக்கதிக்குள்ளகான மக்களின் காணிப்பிரச்சனையினை தீர்க்காது சுதந்திரதினத்தினை கொண்டாடுகின்றது.
இந்த மக்களின் காணிகளை அரசு விரைவில் விடுவிக்கவேண்டும் இன்னிலையில் எதிர்வரும் 04 ஆம்திகதி நடத்தவிருக்கும் கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு மக்கள் பிரதிநிதிதிகள் பொதுமக்கள்,மததலைவர்கள் என அனைவரும் வருகைதந்து மக்களின் காணியினை மீட்டெடுக் ஒத்துளைப்பு நல்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்