வவுனியாவில் சிங்கள புலிவேட்டை விசாரணை ஆறுபேர் கைது!

breaking
    வடக்கில் படையினரை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் மீண்டும் விடுதலைப்புலிகளின் உருவாக்கம் படையினருக்கே தேவையாக உள்ளது விடுதலைப்புலிகள் வந்துவிட்டார்கள் ஆயுத தாரிகள் வந்துவிட்டார்கள் என்ற நாடகங்களை காடுகள் அதிகம் கொண்ட மக்கள் செறிவுகொண்ட வன்னி பிரதேசங்களில் திட்ட மிட்ட நாடகத்தனை அரங்கேற்றும் வகையில் படை புலனாய்வாளர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறான நடவடிக்கையின் ஒன்றுதான் வவுனியா புதூர் காட்டுப்பகுதியில் ஆயுதங்களை போட்டுவிட்டு தப்பிஒடிய நபர் ஒருவரின் நடாகஅரங்கேற்றம்.. கடந்த மாதம் நடைபெற்ற சப்பவத்தின் பின்னணியில் கைதுசெய்யப்ட்ட நபரை வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிங்கள் பொலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது இதன் அடிப்படையில் இவ்வாறான செய்தியினை வெளியிட்டுள்ளார்கள்.   வவுனியா – புதூர் ரயில் வீதிக்கு அருகில் துப்பாக்கி, ரவைகள் மற்றும் கைக்குண்டுகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு உதவி புரிந்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீரிகம மற்றும் வெயாங்கொடை பகுதிகளிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன​ர். புதூரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலுக்கு அமைய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 402 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வவுனியா, இராஜகிரிய , மீரிகம, மற்றும் வெயாங்கொடை பகுதிகளைச் சேர்ந்த 26 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 6 சந்தேகநபர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.