பாகிஸ்தானுக்கு பயணமாகியது இனவாத சிங்கள கடற்படை!

breaking
பாகிஸ்தானில்  இடம்பெறவுள்ள 44 நாடுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சியில்  இனவாத சிங்களக்கடற்படையும் பங்கேற்கவுள்ளது. பாகிஸ்தான்- கராச்சியில் அமான்-2019 என்ற பெயரிலான இந்த கூட்டுப்பயிற்சி எதிர்வரும் 8ஆம் திகதி முதல், 13ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, சயுரால என்ற இனவாத சிங்கள  கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து நேற்று (சனிக்கிழமை) பாகிஸ்தானுக்கு பயணமாகியுள்ளது. 28 அதிகாரிகள், 142 மாலுமிகள் என மொத்தம், 170 இலங்கை கடற்படையினருடன் பயணமாகியுள்ள இந்தக் கப்பல், எதிர்வரும் 6ஆம் திகதி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை சென்றடையும். இதில் அவுஸ்ரேலியா, கனடா, சீனா, ஜேர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மலேசியா, மாலைதீவு, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஷ்யா உள்ளிட்ட 44 நாடுகளின் கடற்படைகளின், பெரும் எண்ணிக்கையான போர்க்கப்பல்களும், விமானங்களும் பங்கேற்கவுள்ளன.