முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மீட்பு.

breaking

வட தமிழீழம் 

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில முள்ளிவாய்கால் மேற்கு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

 மக்கள் வழங்கிய தகவலுக்கமை படையினர் நடத்திய ஆய்வுகளில் இவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன், 

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்களே மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனுள் அடையாள அட்டைகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக  பேரினவாத சிங்கள அரசுக்கான பொலிஸாருக்கு இது தொடர்பான தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், நந்திக்கடல் களப்பு பகுதியில் 

குறித்த ஆவணங்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.