முள்ளிவாய்க்காலும் முன்நூறு குழுக்களும்!

breaking

தமிழர் விடுதலைப்போராட்டத்தின் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழர்தாயகத்தில் முன்நூறு குழுக்களுக்கும் அதிகமாக தமிழர் பிரிக்கப்பட்டுள்ளார்கள்.

விடுதலைப்புலிகளின் நிர்வாக ஆளுகையின் கீழ் ஒரே தலைமையின் கீழ் பல அலகு நிர்வாகங்கள் பிரிக்கப்பட்டு மக்கள் சேவைகளை வழங்கிய அதே மக்கள் அதே போராளிகள் இன்று முன்னாள் போராளிகளாகவும் இன்றைய போராளிகள் என்று சொல்பர்கள் பலரும் தமிழ்மக்களுக்கு நல்லது செய்தாலும் பலர் தங்கள் சட்டைப்பைகளை நிரப்பிக்கொண்டே சில பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம் பெயர் தமிழ் மக்களின் பணத்தினை வைத்து சேவை செய்கின்றார்கள்.

இது தான் இன்று வடக்கு கிழக்கு தமிழர் வாழ் தாயக பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இது எல்லோருக்குமான செய்தி அல்ல பொருத்தமானவர்கள் இதனை எடுத்துக்கொள்ளவும்.

சில அமைப்புக்கள் புலம் பெயர் தமிழ் மக்களின் உதவியுடன் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றார்கள். பல முன்னாள் போராளிகள் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களாக செயற்படும் அமைப்புக்கள் என்று காட்டிக்கொள்பவர்கள் பலர் அமைப்புக்களை நிறுவி அதன் ஊடாக மக்கள் சேவை செய்துவருகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் போரின் பின்னர் முந்நூறு குழுக்களாக இயங்க தொடங்கியுள்ள பலர் சிங்கள படையின் புலனாய்வாளர்களுடன் நெருக்கமான தொடர்பினையும் பேணி வருகின்றார்கள் இவ்வாறு செயற்படும் குழுக்களுக்கிடையில் தற்போது மோதல் நிலை வலுத்து வருகின்றன.

இதற்கான காரணம் பணம். புலம்பெயர் தமிழ்மக்கள் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான சில அமைப்புக்களை தொடர்பு கொண்டும் தொடர்பில் இருப்பவர்களும் அவர்களுக்கு பணத்தினை அனுப்பி மக்கள் சேவையினை வெளிப்படுத்தி வருகின்றார்கள்

இவ்வாறு புலம்பெயர் தமிழ் மக்கள் அனுப்பும் பணத்திற்கு பலர் கணக்குகள் காட்டுவதில்லை முகுநூல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒளிப்படங்களை பதிவேற்றி சான்று பகிருகின்றார்கள்.

இவ்வாறு செயற்படும் பல முன்னாள் போராளிகளும் இன்னாள் போராளிகளுக்கும் இடையில் பணத்தினால் பாரிய முறுகல் நிலை தொடர்ந்து வருகின்றது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்,மாவீரர் நாள் நினைவேந்தல்களுக்கும் மாத்திரம் யார் முன்னின்று நடத்துவது என முண்டியடித்துக்கொண்டு வரும் இவ்வாறானவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் சரியாக இனம் காணவில்லை இன்றும் பல முன்னாள் போராளிகளின் குடும்பங்கள்,மாவீரர் பெற்றோர்கள்,அங்கவீனமானவர்கள் தங்கள் அடுத்த வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

பணம் இவ்வாறானவர்களின் சட்டைப்பையினை நிரப்பி சண்டைவரை கொண்டு சென்று தமிழர்களின் ஒற்றுமையினை சீர்குலைக்கின்றன இது சிங்கள படை புலனாய்வாளர்களினால் திட்டமிட்டு நடத்தப்படும் சில சம்பவங்கள் வன்னியில் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறானவற்றை புலத்தில் உள்ள தமிழ்மக்கள் நன்கு புரிந்துகொண்டு ஒவ்வொருவரும் செய்யும் நிதி உதவி உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கின்றதா என்பதை அறிந்து கொண்டு செய்யவேண்டும் தாயகத்தில் ஒரே குடையின் கீழ் மக்களை கொண்டுவர முடியாவிட்டாலும் இலக்கு ஒன்றே என்ற நோக்கத்தில் நகர்த்திக்கொள்ள புலம் பெயர் சமூகம் நம்பிக்கையுடனும் உன்னிப்புடனும் அவதானத்துடனும் செயற்படவேண்டும் என்று இந்த செய்தி ஊடாக சொல்லி நிக்கின்றோம்.

(ஈழவன்)