முன்னாள் போராளிகளுக்கு வீடில்லை! - அரச அதிகாாிகள் தன்னிச்சையாக முடிவு?

breaking

வட தமிழீழம், முல்லைத்தீவு- தேறாங்கண்டல் கிராமத்தில் அரசால் வழங்கப்படும் வீட்டு திட்டத்திற்கான பயனாளிகள் தொிவில் அரச அதிகாாிகள் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

தேறாங்கண்டல் பகுதியில் தற்காலிகக் கொட்டில்களில் மக்கள் வசித்து வருகின்றனர். பல முன் னாள் போராளிகளுக்கும் வீட்டுத்திட்டம் கிடைக்கவில்லை. ஏற்கனவே இந்த பகுதியில் மக்களு க்காக பிரதேச செயலகத்தின் சிபாரிசுடன் வழங்கப்பட்ட பல வீடுகள் பாவனையற்றுள்ளன.

இது தொடர்பில் பிரதேச மக்கள் கையெழுத்து இட்ட அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் மற்று ம் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர், வடமாகாண ஆளுனர் உள்ளிட்டவர்களு க்கு அனுபப்பட்டுள்ளது.

“தேறாங்கண்டல் கிராமத்தில் உள்ள நிர்வாகத்தையோ, மக்களையோ வைத்து கூட்டம் நடத்த ப்படாமல் வீட்டுத்திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவு இடம்பெற்றுள்ளத. வீட்டுத்திட்டம் வழங் கும் நடைமுறைப்படி நடைபெறவில்லை.

இது தொடர்பில் ஆராய்ந்து மக்கள் முன்னிலையில் கூட்டத்தை நடத்தி பயனாளிகள் தெரிவு செய்யப்பட வேண்டும்” என்று மக்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.