ஊடகங்களிற்கு அனுமதி வழங்காது வடக்கு ஆளுநர் நடாத்தும் முக்கிய சந்திப்பு கிளிநொச்சியில்

breaking
  [caption id="attachment_49993" align="alignright" width="300"] கோவை படம்[/caption] வடமாகாணத்தின் ஶ்ரீலங்கா  ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்களையும் உள்ளடக்கி, குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட 39 ஏக்கர் காணிகளில் 24 ஏக்கர் காணிகள் இன்று காணி உரிமையாளர்களிடம் வட.மாகாண ஆளுநரால் கையளிக்கப்பட்டன. குறித்த காணிகளில் அடையாளம் காணப்பட்ட 11 காணி உரிமையாளர்களிற்கு இவ்வாறு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கலந்துரையாடலிற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.