Take a fresh look at your lifestyle.

வெள்ளை வான் குறித்த உண்மைகளை மறைத்த தளபதி: நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்

வெள்ளை வேனில் கடத்தி, சட்ட விரோ­த­மாக தடுத்து வைக்­கப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேருக்கும் என்ன ஆனது என்­பது உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளையும் அப்­போ­தைய கடற்­படை தள­பதி அட்­மிரல் வசந்த கரன்­னா­கொட நன்கு அறிந்­தி­ருந்­துள்­ள­தா­கவும், அவ்­வா­றான சூழலில் அவற்றை அவர் மறைத்­துள்­ள­தா­கவும் சி.ஐ.டி. விஷேட மேல­திக அறிக்கை ஊடாக கோட்டை நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளது.

5 மாணவர் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் தொடர்­பி­லான வழக்கு நேற்று கோட்டை பதில் நீதிவான் பிரி­யந்த லிய­னகே முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது இடம்­பெறும் விசா­ர­ணை­களின் முன்­னேற்ற அறிக்­கையை மன்றில் சிறப்பு விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா சமர்ப்­பித்தார். அத­னூ­டா­கவே மேற்­படி விட­யங்­களை அவர் மன்­றுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார்.

காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள 11 பேருக்கு என்ன ஆனது என்­பது தொடர்பில் மிகத் தெளி­வாக அப்­போ­தைய கடற்­படை தள­பதி வசந்த கரன்­னா­கொட அறிந்­தி­ருந்­த­மைக்­கான பல வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இந் நிலையில் அண்­மையில் நாம் கடற்­படை தள­ப­தி­யாக வசந்த கரன்­னா­கொட இருந்த போது அவ­ரது கடற்­படை சார் நட­வ­டிக்­கைகள் தொடர்­பி­லான உத­வி­யா­ள­ராக இருந்த ரியல் அட்­மிரல் உதய கீர்த்தி விஜ­ய­பண்­டா­வையும் விசா­ரித்து வாக்கு மூலம் பெற்றோம்.

அத்­துடன் கடத்­தப்­பட்­ட­வர்கள் சட்ட விரோ­த­மாக இறு­தி­யாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக நம்­பப்­படும் கன்சைட் இர­க­சிய சித்­தி­ர­வதை முகாமின் பொறுப்­பா­ள­ராக இருந்த இவ்­வ­ழக்கின் 2 ஆம் சந்­தேக நப­ரான கொமாண்டர் ரண­சிங்­கவின் மிக நெருங்­கிய உத­வி­யா­ள­ராக இருந்த குமார என்­ப­வரை நாம் விசா­ரித்து வரு­கின்றோம்.

இவ்­வ­னைத்து விசா­ர­ணை­க­ளிலும் இக்­க­டத்தல் தடுத்து வைப்பை வசந்த கரன்­னா­கொட அறிந்­தி­ருந்தார் என்­பது புல­னா­கின்­றது என விசா­ர­ணை­களின் நிலை­மையை மன்­றுக்கு விசா­ரணை அதி­காரி அறி­வித்­துள்ளார்.

இதற்கு முன்­னரும் இது தொடர்பில் விசா­ரணை அதி­கா­ரி­யினால் மேல­திக விசா­ரணை அறிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன..

இந் நிலையில் நேற்று வழக்கில் 10 ஆவது சந்­தேக நப­ரான கடற்­படை லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி முதி­யன்­ச­லாகே சந்தன் பிரசாத் ஹெட்டி ஆராச்சி 11, 12 ஆம் சந்­தேக நபர்­க­ளான சஞ்­ஜீவ பிரசாத் திலங்க சேனா­ரத்ன, அண்­ணாச்சி எனப்­படும் இம்­பு­லா­வல உப்புல் சமிந்த ஆகியோர் சிறை அதி­கா­ரி­களால் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இதன்­போது 11 ஆவது சந்­தேக நபர் சார்பில் மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி மேஜர் அஜித் பிர­சன்ன, சி.ஐ.டி. 10 வரு­டங்­க­ளாக செய்யும் விசா­ர­ணை­களில் எத­னையும் கண்­டு­பி­டிக்­க­வில்லை என குறைக் கூறி சி.ஐ.டி.யை விமர்­சித்தார்.

இதன்­போது நீதிவான் பிரி­யந்த லிய­னகே, விசா­ரணை தொடர்பில் எத­னையும் கூற சந்­தேக நபரின் சட்­டத்­த­ர­ணிக்கு உரிமை இல்லை எனவும், சந்­தேக நபர் சார்­பி­லான விட­யங்­களை மட்டும் மன்­றுக்கு கூறு­மாறு எச்­ச­ரித்தார்.

இந் நிலையில் சி.ஐ.டி. விசா­ரணை அதி­காரி நிசாந்த சில்வா, தற்­போது விளக்­க­ம­றி­யலில் உள்ள மூவர் தொடர்­பிலும் கப்பம் பெற்­றமை தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொலை­பேசி தர­வு­களை மையப்­ப­டுத்தி தொடர்­வ­தாக சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­ய­டுத்து 10 ஆவது சந்­தேக நப­ரான கடற்­படை லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி முதி­யன்­ச­லாகே சந்தன் பிரசாத் ஹெட்டி ஆராச்சி 11, 12 ஆம் சந்­தேக நபர்­க­ளான சஞ்­ஜீவ பிரசாத் திலங்க சேனா­ரத்ன, அண்­ணாச்சி எனப்­படும் இம்­பு­லா­வல உப்புல் சமிந்த ஆகி­யோரை எதிர்­வரும் 20 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.