

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி வெள்ளவத்தையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
87 வயதான அவர், திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக தெரியவருகின்றது.
பல தசாப்த காலமாக தமிழ் அரசியல் பரப்பில் நிலைபெற்றுள்ள ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டவர்.
விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அடிக்கடி தேசியத் தலைவருக்கு கடிதங்களை எழுதி விடுதலைப் போராட்டத்தை கைவிடுமாறு கோரியவர். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் இவர் கடும் எதிர்ப்புக்களை சம்பாதித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள இனவாத அரசின் கூலிகளாக ஒட்டுக்குழுக்கள் இயங்கிவருகின்றனர். இவர்கள் தமது குடும்பத்தின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்காக சிங்கள அரசால் கொடுக்கப்படும் சலுகைகளை இன்றும் அனுபவித்து வருவதுடன் தொடர்ந்தும் தமிழீழ விடுதலையிற்கு எதிராக இயங்கி வருவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது ஆனந்த சங்கரி போன்ற பலர் இப்பட்டியலில் அடங்குவர்.