கூட்டமைப்பால்தான் கஞ்சா, வாள்வெட்டுச் சம்பவங்கள் எங்களால் அல்ல: ஒட்டுக்குழு தலைவர் டக்ளஸ்

breaking
கேரளக் கஞ்­சா­வைக் கடத்­தித்­தான் அர­சி­யல் செய்ய வேண்­டும் என்ற நிலை­யில் நாங்­கள் இல்லை. நாங்­கள் ஆட்சி அதி­கா­ரத்­தில் இருந்­த­போது, போதைப் பொருள் கடத்­தல்­கள், விற்­ப­னை­கள் என்­பன எமது பகு­தி­க­ளில் இருக்­க­வில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் எப்­போது ஆளுந்­த­ரப்­பு­டன் இணைந்து அர­சி­யல் நடத்­தத் தொடங்­கி­னார்­களோ, அன்று முதலே இத்­த­கைய போதைப் பொருள் கடத்­தல்­க­ளும், கேரள கஞ்சா கடத்­தல்­க­ளும், வாள்­வெட்­டுச் சம்பவங்­க­ளும், சமூக அவ­லங்­க­ளும் எமது பகு­தி­க­ளில் அதி­க­ரித்­துள்­ளன. இவ்­வாறு ஈ.பி.டி.பியின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­தார். ஶ்ரீலங்கா நாடா­ளு­மன்­றில் நடை­பெற்ற ஊழல்­கள் மோச­டி­கள் தொடர்­பி­லான ஒத்­தி­வைப்பு விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். போதைப் பொருள் கடத்தல், வாள்வெட்டுக்கள் போன்ற சமூக விரோத செயல்களுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் ஈ.பி.டி.பியினரே ஒட்டுக்குழுவாக இருந்து கொண்டு காலம் காலமாக தமிழ்மக்களை காணாமல் போக செய்ததுடன் கொன்று குவித்திருந்தார்கள் தவிரவும் கப்பம் பெறுதல் போதைக்கு மக்களை அடிமையாக்குதல் என சொல்லில் அடங்காத மாபெரும் குற்றச் செயல்களை செய்திருந்ததை உலகமே அறியும்