Take a fresh look at your lifestyle.

அடிப்படை மனித உரிமை மீறப்பட்ட நபர்கள் உயர்நீதிமன்றில் வழக்கு!

04.05.18 அன்று புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரப்பகுதியில் காணிப்பிரச்சனை காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது இருவர் காயமடைந்துள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசாரும் மருத்துவமனை வைத்தியரும் இணைந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளமை   மனித ஆணைக்குழு விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபரான பெனடிட் சிறி என்பவரால் 08.05.18 அன்று மாவட்ட நீதிமன்றத்திற்கு குறித்த வழக்கினை கொண்டு சென்றுள்ளார்.
காணி உரிமையாளரினால் 10.05.18 அன்றுமனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த வழக்கினை இணக்க சபையில் விட்டு 08.10.18 திகதிக்கு முன்னதாக மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்
இன்னிலையில் பாதிக்கப்பட்ட நபர்களின் அடிப்படை மனிதஉரிமை மீறப்பட்டமைக்கு தீர்வுகிடைக்காத நிலையில்
கொழும்பில் உள்ள உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
இந்த வழக்கின் விசாரணை 05.02.19 அன்று கொழும்பு உயர்நீதிமன்றில் நீதிபதிகள்.Prasanna Jayawarade,Sujith Mallalgoda, P.N.Turairaja ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு தொடுனர்களின் சட்டத்தரணிகளாக திரு.தசநாயக்க மற்றும் திரு.நிவந்த கத்தரசிங்க ஆகியோர் மன்றில் முன்னிலையாகியுள்ளார்கள்.
எதிர்தரப்பு வாதிகளின் 09 பேரின் அறிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படாததினால் சட்டவாளர்களினால் திகதி கோரப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை 16.05.2019 அன்று திகதியிடப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்னர் எதிர்தரப்பு வாதிகள் அனைவரின் அறிக்கையும் மன்றிற்கு கிடைக்கவேண்டும் என்றும் பணித்துள்ளது