கிரான் விவசாய நிலங்களில் பூச்சிகளின் தாக்கம் அதிகரிப்பு

breaking
  தென்தமிழீழம், மட்டக்களப்பு – கிரான் கமநல சேவை பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களிலுள்ள விவசாய நிலங்கள் பூச்சிகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கிரான் கமநல சேவை பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் 14 ஆயிரத்து 925 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் 9 ஆயிரத்து 294 ஏக்கர் விவசாய நிலங்கள் கபிலநிற தத்தி எனப்படும் பூச்சியின் தாக்கம் காரணமாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த கபில நிற தத்தி, வெள்ளாமைப் பயிர்களைத் தாக்கி பதராக மாற்றுவதாகவும் நெற்பயிர்களை பெரும்பாலும் அறுவடை காலத்திலேயே இவை தாக்குவதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த பூச்சி தாக்கம் காரணமாக நெல் கறுப்பு நிறத்தில் மாறுவதுடன், சோறு துவர்ப்பு சுவையைத் தருவதாகவும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த கபில நிற தத்தி தாக்கம் காரணமாக சுமார் 2 ஆயிரத்து 800 விவசாயிகள் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.