சாவகச்சேரி பிரதேசசபைக்குட்பட்ட வீதிகளை புனரமைக்க கோரிக்கை

breaking
  வடதமிழீழம், யாழ்ப்பாணம் சாவ­கச்­சே­ரிப் பிர­தேச சபை ஆளு­கைக்கு உட்­பட்ட எழு­து­மட்­டு­வாழ் கரம்­ப­கம் – காயன்­க­டவை வீதி, எழு­து­ மட்­டு­வாழ் வடக்கு -மரு­தங்­கு­ளம் வீதி, ஒல்­லாந்­தர் வீதி – கொவ்­வைக்­கட்டி வீதி, எழு­து­மட்­டு­வாழ் தெற்கு பனிக்­கை­யடி வீதி – வேதக்­கால் மயான வீதி ஆகி­யவை மிக­மோ­ச­மா­கச் சேத­ம­டைந்­துள்­ளன. அவற்­றைச் சீர­மைத்து தார் வீதி­யாக மாற்­றித் தர வேண்­டும் என்று சாவ­கச்­சேரி பிர­தேச சபை­யின் வட்­டார உறுப்­பி­னர் இ.தெய்­வேந்­தி­ரம்­பிள்ளை சாவ­கச்­சேரி பிர­தேச சபைத் தவி­சா­ள­ரி­டம் கோரி­யுள்­ளார். இந்த வீதி­களை ஏரா­ள­மா­னோர் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இவை மணல் வீதி­யா­க­வும் குன்­றும் குழி­யு­மா­க­ வும் காணப்­ப­டு­கின்­றன. அந்த வீதி­க­ளைச் சீர­மைத்­துத் தர வேண்­டும். அதை­விட இந்த வீதி­க­ளில் வீதி விளக்­கு­க­ளும் பொறுத்­தப்­பட வேண்­டும் என்று அவர் கோரிக்கை விடு­த­்துள்­ளார். சபை ஆளு­கைக்கு உட்­பட்ட பகு­தி­க­ளில் ஏரா­ள­மான வீதி­கள் சீர­மைக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன. அவை நிதி கிடைக்­கும்­போது சீர­மைக்­கப்­ப­டும் என்று பிர­தேச சபை­யி­னர் தெரி­வித்­த­னர்.