Take a fresh look at your lifestyle.

மஹிந்த – மைத்திரி அணிகள் இணைப்பு: ஆராய டளஸ் தலைமையில் குழு

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அணியும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அணியும் இணைந்து பொது கூட்­ட­ணி­யொன்றை உரு­வாக்­கு­வது தொடர்பில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­க­ப்பெ­ரும தலை­மையில் விசேட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் நேற்று முன்­தினம் இரவு கொழும்பில் சந்­தித்து முக்­கிய பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினர். இதன்­போதே இந்த குழுவை நிய­மிப்­ப­தற்கும் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மைத்­திரி அணியும் மஹிந்த அணியும் இணைந்து பொது கூட்­ட­ணி­யொன்றை அமைப்­பது தொடர்­பா­கவே இதன்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

அந்த வகையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டளஸ் அழ­க­பெ­ரும தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள இந்த குழுவில் முன்னாள் எம்.பி. ஜி.எல். பீரிஸ் மற்றும் சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான உத­ய­கம்­பன்­பில, திலங்க சும­தி­பால உள்­ளிட்­ட­வர்­களும் ஏனைய கட்­சி­களின் தலை­வர்­களும் இடம்­பெ­று­கின்­றனர்.

இவர்கள் விரைவில் விசேட கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் பொது­ஜன பெர­முன ஆகிய கட்­சி­களின் தலை­மையில் அனைத்­துக்­கட்­சி­க­ளையும் இணைத்து பொது­வான பய­ண­மொன்றை முன்­னெ­டுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளனர்.

இது தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டளஸ் அழ­க­பெ­ரும தகவல் தரு­கையில்;

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன உள்­ளிட்ட ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு எதி­ரான அனைத்­துக்­கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து பொது இணக்­கப்­பாட்­டுடன் பய­ணிப்­பது தொடர்பில் ஏற்­க­னவே விரி­வாக ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது. இந்த நிலையில் அந்த கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் அதற்­கான அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தற்­காக எனது தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­தக்­கு­ழு­வா­னது எதிர்­வரும் வாரங்­களில் இது­தொ­டர்பில் ஆராய்ந்து தீர்­மா­னங்­களை எடுக்­க­வுள்­ளது. குறிப்­பாக ஐக்­கிய தேசி­ய­கட்­சிக்கு எதி­ராக அனைத்­துக்­கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஒரு பல­மான கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தக்­கூட்­டணி அடுத்­து­வரும் தேர்­தல்­களில் மிகவும் பல­மான சக்­தி­யாக போட்­டி­யிடும் . இத­னு­டைய ஏனைய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்­மா­னங்­களை எடுக்­கவே எனது தலை­மையில் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தக்­கு­ழுவில் பல உறுப்­பி­னர்கள் இடம்பெறுகின்றனர். அனைத்துக்கட்சிகளினதும் பிரதிநிதிகள் அதில் இடம்பெறுகின்றனர்.

கேள்வி; சின்னம் குறித்தும் ஆராயப்படுமா?

பதில்; எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பின்னர் ஆராயவேண்டிய விடயமாகும். முதலில் நாங்கள் இணைந்து பொதுக் கூட்டணியை அமைக்கவேண்டும். அதன் பின்னரே ஏனைய விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்றார்