வடதமிழீழம் வவுனியாவில் சிங்களத்தின் இறப்பர் பண்ணை தொடரும் நில அபகரிப்பு

breaking
வடதமிழீழம் வவுனியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் கிராமங்களில் இறப்பர் பயிர் செய்கையினை சிறிலங்கா இனவாத அரசு  ஊக்குவிக்க தொடங்கியுள்ளது.அவ்வகையில் வடதமிழீழம் வவுனியாவில் முதற் தடவையாக் 8 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட இறப்பர் உற்பத்தித்திட்டத்தில், அதன் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
வடதமிழீழம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் ஏற்பாட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் நெடுங்குளம் பகுதியில் சுமார் 8 ஏக்கர், பரப்பளவில் சமத் நந்திக்க என்ற தனிநபரால் இறப்பர் உற்பத்தித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
 
சிறிலங்கா இனவாத அரசின் பெருந் தோட்ட பயிர்ச் செய்கை அமைச்சின் செயலாளர் கருணந்த கொள்வனவு நடவடிக்கையை இன்று ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் இறப்பர் செய்கையின் பணிப்பாளர்  ஆர். வி. பிரேமதாசா, தோட்டத் தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.ஏ. ரஞ்சன, வவுனியா தெற்கு சிங்களப்பிரதேச செயலாளர் ஆர். ஜானக, வவுனியா மாவட்ட மேலதிக செயலர் திரு. த. திரேஸ்குமார் இறப்பர் உற்பத்தி பயிர்ச் செய்கை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
 
வடதமிழீழம்  வவுனியா தெற்கு பகுதி தமிழ் மக்களது காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தெற்கு குடியேற்றவாசிகளிற்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டுவருகின்ற நிலையில் இறப்பர் பண்ணை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.