Take a fresh look at your lifestyle.

பிரதமர் மோடிக்‍கு எதிராக போராட்டம் – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.!

ஆந்திர மாநிலத்திற்கு நாளை  வருகை தரவிருக்‍கும் பிரதமர் நரேந்திர மோடிக்‍கு எதிராக, போராட்டம் நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத விவகாரத்தில், பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய திரு.சந்திரபாபு நாயுடு, நாளை மறுநாள் ஆந்திராவுக்‍கு வருகை தரவுள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு எதிராக பெரிய அளவில் தர்ணா போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தப் போராட்டத்தை தொண்டர்கள் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார்.

மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் 11-ந்தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும், தேசிய கட்சி தலைவர்கள் பலர் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் திரு.சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.