Take a fresh look at your lifestyle.

பேரினவாதிகளான மைத்திரிக்கும் மகிந்தவிற்கும் இடையில் தேசிய கூட்டணியாம்

 

ஶ்ரீலங்கா ஜனாதிபதியும் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய தேசிய கூட்டணி எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் உதயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மைத்திரி- மஹிந்த கூட்டணி குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய தேசிய கூட்டணி அமைப்பது தொடர்பிலான முதற்கட்ட நடவடிக்கைகள் சிறப்பாக நிறைவுபெற்றுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்து, அறிக்கை தயாரிப்பதற்கு குழுவொன்று அமைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால், எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மைத்திரி-மஹிந்த கூட்டணி தொடர்பில் அறிவிக்கப்படுமென வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.