புலம் பெயர் தமிழர்களின் பங்களிப்பில் தென்தமிழீழ புற்தரை மைதானத்திற்கான இரண்டாம் கட்ட பணிகள்

breaking
  தென்தமிழீழத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் இன்று கொழும்பில் கைச்சாதிடப்பட்டது. தென்தமிழீழத்தில் முதல் தடவையாக புற்தரையிலான கிரிக்கெட் மைதானம் ஒன்று மட்டக்களப்பில் அமைக்கப்பட்டு வருவதை நாம் யாவரும் அறிவோம். இம்மைதான முதற்கட்ட பணிகள் தற்காலிகமாக தடைப்பட்டு இருந்த போதிலும் இப்பணிகளை மிக விரைவில் முடிக்கப்படுவதற்காக செயற் திட்டங்கள் துரித கதியில் நடைபெற தொடங்கியுள்ளன. இதன் இரண்டாம் கட்ட பணிகளை ஆரம்பிக்கும் நோக்குடன் ஒரு ஒப்பந்தமே ஶ்ரீலங்கா கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது இவ்வொப்பந்தத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் சார்பாக திரு.புவனசிங்கம் வசீகரன் அவர்களும் Arch - Triad Consultants (Pvt) Ltd (ஆர்ச்-ரைட் கென்சல்டன் பிறைவட் லிமிட்டெட்டின்) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO) திரு.ராஜு சிவராமும் 05.02.2019 அன்று கொழும்பில் Arch - Triad Consultants (Pvt) Ltd தலைமையக காரியாலத்தில் வைத்து கைச்சாதிட்டனர். இதன் போது கோட்டைமுளை விளையாட்டு கிராமத்தின் கொழும்பு பிரதிநிதி திரு.மல்கம் டிலிமா அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ் இரண்டாம் கட்ட பணிகளுக்கென மொத்தம் 250 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாகவும் முதல் கட்டமாக 50 மில்லியன் ரூபாய்களுக்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திரு.புவனசிங்கம் வசீகரன் தெரிவித்துள்ளார். இதன் போது மிக முக்கியமாக செய்யப்படவுள்ள வேலைகள் பற்றியும் அவர் விவரித்தார் • கிரிக்கெட் வீரர்கள் தங்கி இருக்க கூடியவாறு சகல வசதிகளுடன் கூடிய அறைகள் நிர்மானித்தல் • கிரிக்கெட் வீரர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடிய (GYM ROOM) அறைகளை உருவாக்குதல் • கிரிக்கெட் வீரர்கள் கலந்துரையடக் கூடியதும் ஊடகவியளாளர்கள் சந்திப்புக்கென மண்டபம் உருவாக்குதல் • கிரிக்கெட் முகாமையாளர்களுக்கான அறை அமைத்தல் • நடுவர்களுக்கான அறை அமைத்தல் • வெளி இடங்களில் இருந்து வருகை தருபவர்கள் தங்கி செல்ல கூடியவாறு 30 வீரர்கள் தங்க கூடிய சகல வசதிகளும் உள்ள தனி அறைகள் உருவாக்குதல் • அத்துடன் பார்வையாளர் அரங்கமும் அமைத்தல் Arch - Triad Consultants (Pvt) Ltd இந்நிறுவனம் ஶ்ரீலங்காவில் தென் இந்தியாவிலும் கட்டிட நிர்மானப்பணிகளை சிறப்பாக செயற்பட்டதை அவதானித்தே இவர்களுடன் இவ்வொப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளோம் இவர்கள் 72 வாரங்களில் இப்பணியை பூர்த்தி செய்து தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டு ஏற்கனவே தடைப்பட்ட இருந்த முதற்கட்ட பணிகள் மிக விரைவில் முடி க்கப்டுவதற்காக பணிகள் துரித கதியில் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள கிரிக்கெட் வீரர்களை இனங்கண்டு கொள்வதற்காக மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமம் முன்னெடுக்கும் இச்செயற்பாட்டிற்கு புலம் பெயர்து வாழும் தழிழர்கள் என்கின்ற முறையில் நன்றிகளை தெரிவிப்பதுடன் இம்மைதான அமைப்பிற்கு புலம் பெயர்து வாழும் தழிழர்கள் உதவி செய்ய கிடைத்த சந்தர்பத்திற்கும் நன்றி தெரிவித்தார்.