பெங்களூரில் ராஜபக்சே மற்றும் தி இந்துவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.!

breaking
தி இந்து பத்திரிக்கை பெங்களூரில் நடைபெறும் தனது கருத்தரங்கிற்கு இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்திருப்பதைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று காலை பெங்களூர் ஃப்ரீடம் பார்க் அருகில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. தமிழர் விரோத தி இந்து பத்திரிக்கையைக் கண்டித்தும், ராஜபக்சேவைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே அனுமதி பெற்றிருந்த போதும், பெங்களூர் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட   அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட   தற்போது மைசூர் சாலையில் உள்ள Police Armed Forces Head quarters-ல் வைக்கப்படுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர். முக்கிய குறிப்பு: இந்து பத்திரிக்கையின் துரோகங்கள் 2013இல் பாலசந்திரன் இறந்த புகைப்படம் வெளி வந்து தமிழகமே கொதிப்படைந்திருந்த சூழலில் குறிப்பாக தமிழக மாணவர்கள் வீரமிக்க போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்த வேளையில், மாணவர்களின் கோரிக்கையான, 1.அமெரிக்க தீர்மானத்தை எதிர்ப்பது  2.ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான விசாரணை நடத்த ஐநா முன்முயற்சி எடுக்க வேண்டுமென்ற இந்த இரண்டு கோரிக்கையையும் திசை திருப்பி அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாகவும், போர்குற்றத்திற்கான விசாரணை வேண்டியும் மாணவர்கள் போராடுகிறார்களென்று பச்சை பொய்யை எழுதிய பத்திரிக்கை ’இந்து’ பத்திரிக்கை.