தமிழ் மக்கள் கிணற்றில் பல லட்ஷம் நீரை தினமும் உறிஞ்சும் சிறிலங்கா படையினர்!(மேலதிக படங்கள் இணைப்பு)

breaking

முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் பொது குழாய் கிணறு ஒன்றில் இருந்து சிறிலங்காப்படையினர் தொடர்ச்சியாக பௌசர்களில் நீர் எடுத்து வருவதால் பிரதேச மக்களுக்கும் படையினருக்கும் இடையில் இன்று 10.02.19 முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

கணுக்கேணிபகுதியில் பொது மகன் ஒருவரின் வீட்டிற்கு முன்னால் வீதியில் மக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்ட குழாய் கிணறு ஒன்றில் அதிகளவான நீரினை தண்ணீர்பௌசர்கள் மூலம் படையினர் தொடர்ச்சியாக எடுத்துவருவதால் பிரதேசத்தினை அண்மியுள்ள பொதுமக்களின் கிணறுகளில் நீர் வற்றிவருவதுடன் கிணற்று நீர் மாசடைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் கணுக்கேணி வட்டார பிரதேச சபை உறுப்பினர் த.அமலனிடம் கிராம மக்கள் முறையிட்டுள்ளார்கள். இன்னிலையில் இன்று (10) இதுகுறித்து குறித்த பகுதிக்கு ஊடகயவியலாளர்களை அழைத்துக்கொண்டு பிரதேச சபை உறுப்பினர் பொதுமக்களை சென்றுள்ளார்கள் இன்னிலையில் படையினருக்கும் மக்களுக்கும் பிரதேச சபை உறுப்பினர் அமலனுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு காணொளி எடுத்த ஊடகவியலாளரை அச்சறுத்தும் வகையில் படையினர் செயற்பட்டுள்ளார்கள் தொடர்ந்து படையினரும் அங்கு இருந்தவர்களை புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை சம்பவ இடத்திற்கு படையினரால் முள்ளியவளை பொலீஸார் வரவளைக்கப்பட்டுள்ளார்கள்.

முள்ளியவளை பொலீஸ் நிலையத்தின் உதவி பொலீஸ் அதிகாரியுடன் பிரதேச சபை உறுப்பினர் மக்களின் பிரச்சனை தொடர்பில் தெரிவித்த போது பொலீஸ் அதிகாரி இது அரசாங்கத்தின் காணி இது தனிப்பட்டதீயில் முடிவெடுக்கமுடியாது அரசாங்கம் தான் தீர்பு எடுக்கவேண்டும். இது தொடர்பில் மாவட்ட கூட்டங்களில் முடிவெடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு குறித்த படையினரை குறித்த பகுதியில் இருந்து நீpரினை எடுக்கசொல்லிவிட்டு சென்றுள்ளார் அதன் பின்னர் தொடர்ச்சியாக படையினர் குறித்த குழாய் கிணற்றில் இருந்து நீரினை உறுஞ்சும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் அருகில் உள்ள கிராம மக்களிடம் கேட்டபோது குறித்த குழாய் கிணறு வீதியில் இருந்தாலும் அந்த குழாய் கிணற்றுப்பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டினை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை தொடர்ந்து படையினரின் தண்ணீர் பௌசர்கள் தரித்து நிக்கின்றன என்றும் இந்த தண்ணீர் பௌசர்கள் இறைக்கும் சத்தம் அருகில் இருக்கும் வயோதிபர்கள் முதல் பாடசாலை மாணவர்களை வரை இடையூறு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறான தொடர்ச்சியான செயற்பாட்டினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்