Take a fresh look at your lifestyle.

காணாமற்போனோர் குறித்து ஐ.நா. மாநாட்டில் சிறிலங்கா குறித்தும் விவாதம்

பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக் குழுவின் மாநாட்டி ல், சிறிலங்கா குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்த்து இருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா, நிகரகுவா, வெனிசுலா, குவாத்தமாலா, யேமன், சூடான், மியான்மர், தன்சானியா, உகாண்டா மற்றும் புர்கினா பாசோ மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசு பொறுப்புக் கூறல் செயல்முறைகளில் சில முன்னேற்றங்களையே எட்டியுள்ளது என்றும், பொறுப்புக்கூறலில் மெதுவாகவே செயற்படுவதாகவும் சீரான அணுகுமுறையைக் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மார்ச் 22 ஆம் திகதி வரை 40 ஆவது அமர்வு நடைபெறவுள்ளது.