குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13,14,15 ஆம் திகதிகளை கறுப்பு தினமாக அனுட்டிப்பு

breaking
  புத்தளத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான நாட்களை கருப்பு தினமாக சர்வ மதங்கள் சபை பிரகடனம் செய்துள்ளது. கொழும்பிலுள்ள குப்பைகளை அறுவாக்காட்டில் கொட்டுவதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நீதிமன்ற வழக்கு இறுதி நிலையை எட்டியுள்ள நிலையில் அதனை பலப்படும் முகமாக இந்த கருப்பு நாள் அனுஸ்டிக்கப்படவுள்ளது. எதிர்கால சந்ததியினரை இல்லாதொழிக்கும் செயற்பாடாக அமையும் இந்த திட்டத்திற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கருப்பு தினமாக குறித்த நாட்களை அனுஷ்டிக்க வேண்டும் என சர்வ மதங்கள் சபை கேட்டுக்கொண்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 13 ஆம் திகதி வீடு வாகனங்களில் கறுப்புக்கொடி கட்டுமாறும், வேலைக்கு செல்பவர்கள் கருப்பு பட்டி அணிந்து எதிர்ப்பை வெளிக்காட்டுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர், அடுத்த நாள் கொழும்பு கலைமுகத்திடலில் நோம்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும், மறுதினம் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.