கணுக்கேணிப் பகுதியில் டெங்கு பரப்பும் ஶ்ரீலங்கா இராணுவம்

breaking
  வடதமிழீழம், முள்­ளி­ய­வளை கணுக்­கே­ணிப் பகு­தி­யில் குழாய்க் கிண­ற்றுக்­காக மக்­க­ளின் வாழ்வி­டத்­தில் முகாம் அமைத்து நிலை­கொண்­டுள்ள படை­யி­ன­ரின் நட­வ­டிக்­கை­யால், அந்­தப் பகு­தி­யில் மக்­கள் வாழ­மு­டி­யாத நிலை­யும், டெங்கு பர­வும் அபா­ய­மும் காணப்­ப­டு­வ­தாக கரை­து­றைப்­பற்று பிர­தேச சபை தவி­சா­ளர் க.தவ­ராசா தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் ஊட­கங்­க­ளுக்கு மேலும் தெரி­வித்­த­தா­வது: பொது­மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­யில் படை­யி­னர் முகாம் அமைத்­துள்­ள­னர். அவர்­க­ளது முகாம் அமைந்­துள்ள சூழல் டெங்கு பர­வும் அள­வுக்கு அசுத்­த­மாக இருக்­கின்­றது. அவர்­கள் பாவிக்­கும் மல­ச­ல­கூ­டத்­தின் குழி தக­ரத்­தி­னால் மூடப்­பட்­டுள்­ளது. அதில் ஓட்­டை­கள் காணப்­ப­டு­கின்­றன. இதி­லி­ருந்து எழு­கின்ற துர்­நாற்­றத்­தால் அயல் பகு­தி­க­ளில் மக்­கள் வாழ முடி­யாத நிலமை காணப்­ப­டு­கின்­றது – என்­றார்.