கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கியவர் கைதாகி பிணையில் விடுதலை

breaking
  வடதமிழீழம், யாழ்ப்பாணம் வர­ணி­யில் இடம்­பெற்ற கொள்­ளைச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வ­ருக்கு உடந்­தை­யாக இருந்­த­வர் என்று பொது­மக்­க­ளால் குற்­றம் சுமத்­தப்­பட்ட இளை­ஞர் ஒரு­வர், கடு­மை­யா­கத் தாக்­கப்­பட்டு மீசா­லை­யி­லி­ருந்து வரணி இயற்­றாலை வரை­யில் நேற்­று­முன்­தி­னம் இழுத்­துச் செல்­லப்­பட்­டி­ருந்­தார். தாக்­கு­த­லுக்­குள்­ளான நபர் வழங்­கிய வாக்­கு­மூ­லத்­துக்கு அமை­வாக அவ­ரது வீட்­டுக்கு முன்­னால் வசிக்­கும் நபர் ஒரு­வ­ரைப் பொலி­ஸார் கைது செய்­துள்­ள­னர். அவர் நீதி­வான் முன்­னி­லை­யில் முற்­ப­டுத்­தப்­பட்டு பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். வரணி இயற்­றா­லை­யில் கடந்த 4ஆம் திகதி இடம்­பெற்ற கொள்­ளைச் சம்­ப­வத்­தைத் தொடர்ந்து சந்­தே­கத்­தில் இரண்டு இளை­ஞர்­கள் பொது­மக்­க­ளால் மடக்­கிப் பிடிக்­கப்­பட்டு பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர். பொது­மக்­க­ளி­டம் பிடி­பட்ட இரண்டு இளை­ஞர்­க­ளும், கொள்­ளைச் சம்­ப­வம் இடம்­பெற்ற வீட்­டுக்கு அரு­கில் இருந்த ஒரு­வரே தமக்கு ‘வேவு’ பார்த்து தக­வல் வழங்­கி­ய­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர். ‘வேவு’த் தக­வல் வழங்­கி­ய­தா­கக் கூறப்­பட்ட இளை­ஞன் தலை­ம­றை­வா­கி­யுள்­ளார். அவர் மீசா­லை­யில் பதுங்­கி­யி­ருப்­ப­தாக தக­வல் கிடைத்­த­தும், அங்கு சென்ற பொது­மக்­கள் அவர் மீது தாக்­கு­தல் நடத்தி வர­ணிக்கு அழைத்து வந்­த­னர். இதன் பின்­னர் காவல்துறையினரிடம் ஒப்­ப­டைத்­த­னர். கடும் காயங்­க­ளு­டன் இளை­ஞ­னைப் பொறுப்­பேற்ற பொலி­ஸார் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் அவ­ரைச் சேர்ப்­பித்­த­னர். மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு அவர் மாற்­றப்­பட்­டார். அவ­ரி­டம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளின்­போது, தனது வீட்­டின் முன்­பா­க­வுள்ள ஒரு­வரே தன்­னைத் தாக்­கி­ய­தா­கக் கூறி­யுள்­ளார். இத­னை­ய­டுத்து பொலி­ஸார் அவ­ரைக் கைது செய்­த­னர். அவர் நீதி­வா­னின் இல்­லத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்­டார். அவரை ஒரு லட்­சம் ரூபா ஆள்­பி­ணை­யில் விடு­வித்து வழக்கை எதிர்­வ­ரும் 15ஆம் திக­திக்கு நீதி­வான் ஒத்­தி­வைத்­தார்.