ஸ்ரீலங்காவின் மற்றும் ஒரு மின் கட்டுமானபணி சீனாவிடம்!

breaking
கரவெலப்பிட்டியவில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. 350 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இந்த மின்நிலையத்தைக் கட்டுவதற்கு கேள்விப்பத்திரத்தில் குறைந்த தொகைக்கு விண்ணப்பித்திருந்த உள்ளூர் நிறுவனம், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததை அடுத்தே, சீன நிறுவனத்துக்கு அது வழங்கப்பட்டுள்ளது. சீன நிறுவனம் குறிப்பிட்டுள்ள அதிகளவு தொகைக்கு இந்தக் கட்டுமானப் பணி முன்னெடுக்கப்பட்டால். அடுத்த 20 ஆண்டுகளில் 75 பில்லியன் ரூபாவை நாடு இழக்க நேரிடும் என்று சிறிலங்கா மின்சார சபையின் பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.