பலாலி நிலமீட்புப் போராட்டம்: 16ஆவது வாரமாக தொடரும் மக்கள் போராட்டம்!

breaking

பலாலி நிலமீட்புப் போராட்டம்: 16ஆவது வாரமாக தொடரும் மக்கள் போராட்டம்!

வட தமிழீழம் , யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பலாலி பகுதியில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள பூர்வீகக் காணிகள், விவசாய நிலங்கள் மற்றும் ஆலயங்களை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் இன்று 16ஆவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்றைய போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் நிலமீட்புக் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மக்களின் வாழ்வாதாரத்தையும் பூர்வீக நில உரிமையையும் மீட்டெடுக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.