தமிழ்மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் சதி முயற்சியே ரணிலின் வடக்கிற்கான பயணம்!

breaking
கூட்டமைப்பு ஜக்கியதேசியக்கட்சியுடன் இணைந்து தமிழ்மக்களுக்கு ஏதோ ஒரு தீர்வினை பெற்றுத்தரும் என்ற மாயையினை ஏற்படுத்தி மீண்டும் இந்த மக்களை ஏமாற்றி அடுத்துவரும் தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான ஒரு சதி முயற்சியாகவே வடக்கிற்கான ரணிலின் வருகை அமைந்துள்ளது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.. ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினை தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஆதரிக்கின்ற பொழுது தெரிவித்த விடையம் போர்க்குற்ற வாளிகளை சர்வதேச நீதிமன்ற கூண்டில் நிறுத்துவோம் சமஸ்டி தீர்வினை பெற்றுத்தருவோம் காணாமல் போனவர்களை கண்டறிந்து தருவோம் அரசியல் கைதிகளை விடுவிப்போம் காணிகளை விடுவிப்போம் போன்ற செயற்பாடுகளை மக்கள் மத்தியில் அறிவித்து ரணிலுக்கு ஆதரவ கொடுத்தார்கள். இன்று வடக்கில் உள்ள தமிழ்மக்கள் மத்தியில் ரணிலை கொண்டுவந்து அவர் ஒரு பெரிய மீட்பர் போன்ற தோற்றப்பாட்டினை கூட்டபை;பு காட்டிநிக்கின்றது. இந்த செயற்பாடு தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடு தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தொடர்ந்தும் கிளிநொச்சி மக்களை ஏமாற்றி பேய்ப்பாட்டி இந்த அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலினை கொண்டு செல்வதற்குதான் முயற்சி செய்கின்றார்கள். தமிழ் மக்களுக்காக கடந்த நான்கு ஆண்டுகளாக எதையுமே செய்யாத ஜக்கியதேசிய கட்சி அரசாங்கம் இப்பொழுது விழுந்தடித்து வந்து சில வேலைகளை செய்வதுபோல் காட்டிக்கொள்வது கூட்டமைப்பு ஜக்கியதேசியக்கட்சியுடன் இணைந்து தமிழ்மக்களுக்கு ஏதோ ஒரு தீர்வினை பெற்றுத்தரும் என்ற மாயையினை ஏற்படுத்தி மீண்டும் இந்த மக்களை ஏமாற்றி அடுத்துவரும் தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான ஒரு சதி முயற்சியாகவே வடக்கிற்கான ரணிலின் வருகை அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இடம்பெற்ற மழை வெள்ளப்பெருக்கில் பலநூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன அவர்களுக்கு பத்தாயிரம் ரூபா இழப்பீடு வழங்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது ஆனால் எதுவும் வழங்கப்படவில்லை அங்கு அடிக்கல் நாட்டுகின்றோம் இங்கு அடிக்கல் நாட்டுகின்றோம் அதற்கு நிதி ஒதுக்குகின்றோம் இதற்கு நிதி ஒதுக்குகின்றோம் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். கூட்டமைப்பிற்கு மக்கள் என்ன விடையத்திற்காக வாக்களித்துள்ளார்களோ அந்த விடையத்தினை முற்றாக கைவிட்டு ஈ.பி.டி.பியும் விஜயகலாவும் செய்த வேலையினை கூட்டமைப்பு தட்டிப்பறித்து இவர்கள் செய்வதன் ஊடாக சர்வதேச அளவில் இந்த சிங்கள அரசினை பாதுகாக்கும் நடவடிக்கையில் கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த துரோக நடவடிக்கையினை இவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.