Take a fresh look at your lifestyle.

17 ஐ.தே.க. எம்.பிக்கள் இரகசியமாகச் சந்திப்பு; பெரும் குழப்பத்தில் உயர்பீடம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் 17 பேர் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக இரகசியச் சந்திப்புகளை நடத்தி வருவதால் கட்சியின் உயர்பீடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக அறியமுடிகின்றது.

நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்டம் முன்வைக்கப்படவுள்ள நிலையில், பின்னிலை எம்.பிக்களின் செயற்பாடானது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பிவிட்டுள்ளது.

இந்த எம்.பிக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளபோதிலும், எதற்காக இவர்கள் இரகசியச் சந்திப்புகளை நடத்த வேண்டும்? இதன் பின்புலம் என்ன? இவர்களை இயக்குவது யார்? – என்றெல்லாம் மூத்த உறுப்பினர்கள் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இதற்கான காரணங்களைப் பின்னிலை எம்.பிக்கள் வெளிப்படையாக அறிவிக்காதபோதிலும், ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்படவேண்டும், எமது கட்சி விவகாரங்களில் பங்காளிக்கட்சிகள் தலையிடக் கூடாது, தேசிய அரசு அவசியமில்லை என்பன உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பிலேயே நாம் இரகசியக் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர் எனத் தமக்கு நெருக்கமா னவர்களிடம் கூறியுள்ளனர் அவர்கள்.

குறிப்பு:>