இராணுவத்தினா் போா்க்குற்றங்களை செய்தமை உண்மையே! - சந்திாிக்கா

breaking

இதை சொல்வதற்கு செம்மணி புகழ் அம்மணி சந்திாிக்காவுக்கு அருகதை உள்ளதா..?

2009ம் ஆண்டு இறுதிப்போாில் இலங்கை இராணுவத்தினா் போா்க்குற்றங்களை செய்தமை உண்மையே என கூறியிருக்கும் சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா.

சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார். போர் நிறைவடைந்த பின்னர் ஒரு தரப்பு மற்றைய தரப்பு மீது குற்றம் சுமத்தி வருவதாகவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுக்களை இராணுவத்தினர் இழைத்துள்ளார்கள் என்பதை முன்னாள் இராணு வத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே ஒத்துக் கொண்டுள்ளதாக கூறிய சந்திரிகா போர் வெற்றிக்குப் பிரதான பங்கு அவருடையது.

எந்த விசாரணைக்கும் தயார் என்று கூறியதையும் நினைவுபடுத்தியுள்ளார். எனினும் ராஜபக்ச கு டும்பத்தினர் போர் வெற்றியை தமக்காகக் கொண்டாடுவதாகவும் நாட்டில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டாலும் சர்வதேச சமூகத்தினால்

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மை நிலையைக் கண்டறியவேண்டும் என்றும் தெரிவித்தார். அதற்காக போர் வெற்றியை பெற்றுத்தந்த இராணுவத்தினரை நீதிமன்றக் கூண்டில் ஏற்றுமாறு சொல்லவில்லை என்றும் எனினும்

உயிரிழந்த விடுதலைப் புலிப் போராளிகளுக்கு புத்துயிர் கொடுக்குமாறும் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார். இரு தரப்புச் சண்டையிலும் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் என்ற வகையில்இ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்றும்

நாட்டின் நலன் கருதி – நாட்டின் ஒற்றுமை கருதி இதனை செய்வது அவசியம் என்றும் அவர் சந்தி ரிகா மேலும் தெரிவித்துள்ளார்.