Take a fresh look at your lifestyle.

18 ஆவது திருத்தச் சட்டத்தை மீளக் கொண்டு வர முயற்சி; சிவில் சமூக அமைப்புகள் எதிர்ப்பு

அரசமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் திட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒத்துழைத்து வருகிறார் என்று சிவில் சமூக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காகப் பாடுபட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியமான புரவெசி பலயவின் அமைப்பாளர் காமினி வியன்கொட இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

2010 செப்ரெம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்டம், 2015 ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இல்லாமல் ஒழிக்கப்பட்டது.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டது. அதனை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது. தற்போதைய நிலையில் 18 ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் கொண்டு வரும் சிறிசேன- ராஜபக்ஷவின் முயற்சிகளை முறியடிப்பதே எமது நோக்கம்” என்றார்.

குறிப்பு:>