காவல்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளான திருட்டு குற்றச்சாட்டு கைதி

breaking
திருட்டுக் குற்­றச்சாட்­டில் கைது செயயப்­பட்ட ஒரு­வர் தன்னைப் காவல்துறையினர் சித்திரவதைக்கு உள்ளாக்கினர் என்று யாழ் நீதிவான் நீதிமன்­றில் நேற்றுத் தெரிவித்துள்ளார். உள்ள கொக்குவிலில் வீடொன்றினை உடைத்து திருடிய குற்றச்சாட்டின் பேரில் மூவரை காவல்துறையினர் கெது செய்தீரந்த நிலையில் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கின் சாட்சியாக முறைப்பாட்டைப் பதிவு செய்த மற்றும் சந்தேநபர்களைக் கைது செய்ய உத­விய காவல்துறை உத்தியோகத்தரிடம் சாட்சியம் பெறப்பட்டது. அதன்பின்னர் சாட்சியத்தில் குறுக்கு விசாரணை­கள் உள்ளனவா? என சந்தேகநபர்களிடம் மன்று வினவிய போது இரண்டாவது சந்தேகநபர் தன்னைக் காவல்துறையினர் சித்திரவதை செய்ததாக தெரிவித்துள்ளர்h. காவல்துறையினர் தன்னை கொக்குவிலில் உள்ள இந்து மயானத்தில் வைத்து ‘பைப்’ ஒன்றால் தாக்கிச் சித்­திரவதை செய்து விட்டு அதன் பின்னர் காவல்நிலையம் அழைத்துச் சென்நதாக தெரிவித்துள்ளார். அங்கு காவல்துறையினரும் முறைப்பாட்டாளரும் கூடி நின்று எம்மை அடையா­ளம் காட்டினர் என்று அவர் தெரவித்­தார். எனினும் அவ்­வாறு சித்திரவதை எதுவும் நடக்­கவில்லை என காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்­வ­ரும் ஏப்­ரல் மாதம் 29ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.