லண்டன் பெரு நகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி - QR குறியீட்டுடன் கோப்பைகளில்

breaking

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நாளான மே.18-ஆம் திகதி தமிழ் மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் லண்டன் பெருநகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

மோதலின் இறுதிக் காலத்தில் மோதல் வலயத்துக்குள் சிக்கியிருந்த மக்கள் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு தடை ஏற்படுத்தப்பட்டது. பட்டினியை யுத்த ஆயுதமாக இலங்கை அரசு பயன்படுத்தியது. இந்தக் காலப்பகுதயில் மோதல் வலயத்துக்கு சிக்கியிருந்த மக்களுக்கு கஞ்சியே உணவாக வழங்கப்பட்டது. இந்தக் கஞ்சியைப் பெற வரிசையில் காத்திருந்தவர்களுக்கு குண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்டனர் என இந்தக் கஞ்சியை விநியோகித்து ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்தனர்.

பிரித்தானிய தமிழர்கள் உள்ளூராட்சி மன்றங்கள், ஆலயங்களின் அனுசரனையுடன் பிரித்தானிய தலைநகர் முழுவதும் 1,000 கோப்பை கஞ்சிகள் தன்னார்வலர்களால் விநியோகிக்கப்பட்டன.

இந்தக் கஞ்சிக் கோப்பையில் www.RememberMay2009.com என்ற இணையத்தளத்தில் தரவேற்றப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் அவலங்களை விளக்கும் புகைப்படங்களை காணும் வகையில் QR குறியீடு பதிக்கப்பட்டிருந்தது.