Take a fresh look at your lifestyle.

கரன்னகொடவை தப்பவைக்க சிறப்பு வழிபாடு; கோட்டாவின் ஏற்பாட்டில் நடந்ததாம்

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் 14 ஆவது சந்தேக நபராகச் சேர்க்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு ஆசி வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

கொழும்பு -7 கிரகரி வீதியில் உள்ள சம்போதி விகாரையில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணி தொடக்கம், அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு ஆசி வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவே இதற்கான ஒழுங்குகளை மறைமுகமாகச் செய்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் பேச்சாளரான மிலிந்த ராஜபக்ஷ, இந்த வழிபாடுகளில் பங்கேற்குமாறு சமூக வலைத்தளங்களின் ஊடாக அழைப்பு விடுத்திருந்தார்.

அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யவுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவருக்காகப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன.