திருக்கேதீஸ்வரம் ஆலய சிவராத்திரி வளைவு அடித்துடைப்பு (காணொளி)

breaking
[video poster="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/03/MAnnat_x264-mp4-image.png" width="720" height="480" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/03/MAnnat_x264.mp4"][/video] மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வீதி வளைவு உள்ளூர் கிறிஸ்தவ மக்களால் உடைத்து வீழ்த்தப்பட்டு, அகற்றப்பட்டது. இதற்கு இந்து சமய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மதநல்லிணக்கம் என்று கூறியே, கிறிஸ்தவர்கள் சிவராத்திரி வளைவை உடைத்து வீழ்த்தியுள்ளனர். மன்னார் மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்துக்குச் செல்லும் கோயில் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவே உடைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவை அமைத்தபோதே, அங்குள்ள கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அந்த வளைவை வைத்தபோதே, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட இந்து மத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ மகா தர்மகுமார குருக்கள் தெரிவித்தார். அதுதொடர்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர், குரு முதல்வர் ஆகியோருடன் தாம் பேச்சு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கோவில் வீதியில் அமைக்கப்பட்ட சிவாத்திரி வளைவு உள்ளூர் கத்தோலிக்க மக்களால் அகற்றப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக, மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.