றுகுணு பல்கலையில் அதிகரிக்கும் பகிடிவதைகள்! படிப்பை இடைநிறுத்திய தமிழ் மாணவர்கள்!

breaking
ஸ்ரீலங்கா மாத்தார மாவட்டத்தில் அமைந்துள்ள றுகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றும் 2ம் வருட மற்றும் அதற்கு மேற்பட்ட வருட சிரேஸ்ட மாணவர்களின் அதிகரித்த பகிடிவதையால் புதுமுக மாணவர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் தாம் கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிரேஸ்ட மாணவர்களினாலேயே தாம் அதிகளவில் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் பெண் மாணவிகளும் புதுமுக தமிழ் மாணவிகளுடன் அநாகரீகமற்ற முறையில் அத்துமீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி வெளியில் சொன்னால் நீ இங்கே படிக்கமுடியாது என்று தொடர்ச்சியான அச்சுறுத்தலும் விடுவிக்கப்பட்டுள்ளது. புதுமுக பெண் மாணவிகளின் பாவாடைகளின் பின்புறத்தை பிளேட்டால் வெட்டிவிட்டு உள்ளாடை தெரியும் படி பல்கலைக்கழகத்தை சுற்றி வர சிரேஸ்ட தமிழ் மாணவிகளால் தாம் பணிக்கப்பட்டதாக புதுமுக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் அச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலான ஆதாரங்களை பாதிக்கப்பட்ட மாணவர்கள் எமக்கு அனுப்பியுள்ளனர். புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தொலைபேசி குரல்பதிவுகளும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. றுகுணு பல்கலைக்கழகம் அமைந்துள்ள சூழல் ஒரு முற்றுமுழுதான சிங்கள சூழலாகும். அதனால் இங்கு கல்வி கற்க வரும் புதுமுக மாணவர்களுக்கு சிரேஸ்ட மாணவர்கள் பாதுகாப்பாக வழிகாட்டியாகவே இருக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துவதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் இந்த சிரேஸ்ட மாணவர்கள் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.  அத்துடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபடும் பட்சத்தில் இவர்கள் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவோம் என்பதுடன் இது தொடர்பான முறைப்பாடு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், ஸ்ரீலங்கா பொலிஸாரிற்கும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். பகிடிவதையில் ஈடுபட்டால் 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பதை இச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் நிலம், கல்லி, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்திலும் ஒரு மோசமான இனஅழிப்பை எதிர்கொண்டுள்ள எமது இனம் கல்வி என்ற ஆயுதத்தை பயன்படுத்தியே மீண்டெழ முடியும். வறுமை நிலையிலும் தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் கடினமாக கல்விகற்று பல கனவுகளுடன் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் எமது மாணவர்கள் எமது சக தமிழ் மாணவர்களினாலேயே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது வேதனையான விடயமாகும். யாழ் பல்கலைக்கழகத்திலும் இந்த வாரம் பகிடிவதையால் மோசமாக தாக்கப்பட்ட மாணவன் ஒருவர் படிப்பை இடைநிறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. றுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட தமிழ் மாணவர்களின் புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டால் புகைப்படங்கள் முகம் மறைக்காமல் வெளியிடப்படும். இது தொடர்பில் சிரேஸ்ட மாணவர்களின் பெற்றோர் கவனம் செலுத்தவும் பகிடிவதையின் பிரதானமானவர் றெஜிந்தன். இவரின் தொலைபேசி இலக்கம் 0768*8*81