சர்வதேச மகளிர் நாள் - டென்மார்க் மகளிர் அமைப்பினரால் வெளியீட்ட ஊடக அறிக்கை .!

breaking
சர்வதேச மகளிர் நானள முன்னிட்டு -  டென்மார்க் மகளிர் அமைப்பினரால் வெளியீட்ட ஊடக அறிக்கை .!! மகளிர் அமைப்பு டென்மார்க் "' ஒரு புதுமைப் பெண்ணை இபுரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கின்றது " தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் உலக மகளிர் தினம் மார்ச் 8 ஐ முன்னிட்டு  டென்மார்க் மகளிர் அமைப்பினரால் வெளியிடப்படும் அறிக்கை . உலகப் பெண்களுக்கே வழிகாட்டியாக உயர்ந்து நின்ற எமது பெண்கள் எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் அனைத்து துறைகளிலும் தம்மை வளர்த்துஇதமிழ் தேசிய உணர்வுகளையும் கட்டியெழுப்பிஇ பெண் எழுச்சிக்கு வித்திட்டவர்கள். ஆனால் இன்று தமிழீழத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன. சமூகப்பிரச்சனைகளை உருவாக்கி ஆளுமை சிதைந்த அடிமைத்தன வாழ்வுக்கே பெண்ணினத்தை வழிநடத்திச் செல்கின்றது நல்லாட்சி அரசு. போரினாலே வாழ்க்கைத் துணைவர்களை இழந்ததாலும்இ  போரினாலே வாழ்க்கைத் துணைவர்கள் அங்கவீனர்களாகி விட்டதாலும் குடும்ப பாரத்தை சுமக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பல்லாயிரம் . எனினும் இராணுவத்தாலும்இ இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் இன்றும் எமது தாயகத்தில் பெண்கள்  அனுபவிக்கும் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான ஒடுக்கு முறைகள் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை. தமிழீழத்தில் பெண்கள் இயுவதிகள் மற்றும் சிறுமிகள் மீதான வன்புணர்வு படுகொலைகள் பல நன்கு திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சிங்கள படைகளாலும் இஇந்தியப்படைகளாலும் மிக மோசமாக தமிழீழப் பெண்கள் பாதிக்கப்பட்டனர். இவற்றுக்கான நீதி இதுவரைக்கும் கிடைக்கவில்லை என்பது மிகவும் பெரும் வேதனையாக உள்ளது. 2009ம் ஆண்டு ஆயுத யுத்தம் மௌனித்தது. அதன் பின் பாதுகாப்பு என்ற போர்வையில் சிங்கள இராணுவம் சூழ்ந்திருக்க இகட்டிக்காத்த எம்மின அடையாளங்கள் சீரழிக்கப்படுகின்றன. கலாச்சார சீர்கேடுகள் தோற்றம் பெற்று அதற்கான விதைகள் விதைக்கப்படுகின்றன. பிஞ்சுகள் முகத்தில் போதையின் வடிவம்இ வீதிக்கு வீதி மதுக்கடைகள்இ மறைமுகப் போதைப் பொருள் விற்பனைஇபிள்ளைகள் சீரழிப்பு இவ்வாறு பல வடிவங்களில் இந்தச் சீரழிப்பு இடம்பெறுகின்றது. அங்கே வாழும் பெண்கள் தமக்கு நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்லமுடியாத  துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள். இன்று ஒரு பெண் பிள்ளை தெருவில் தனியாக நடந்து செல்ல முடியாத ஒரு நிலை ஈழத்தில் உருவாகியுள்ளது .  இதனால் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருடைய மனங்களிலும் எங்களைக் கட்டி காத்துஇ பாதுகாப்பு தந்தவர்கள் இஎப்பொழுது திரும்பி வருவார்கள் என்ற ஏக்கம் இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது. தமது உரிமைக்கான குரலை இழந்து இபலவீனப்பட்டு நிற்கும் எமது தாயகப் பெண் குலத்தின் விடுதலைக்காக இஅவர்களது சுதந்திரம் மிக்க சுபீட்சமான எதிர்காலத்திற்காக உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும். 2009 ம் ஆண்டு மே மாதத்துடன் எமது மக்கள் சுவாசித்த சுதந்திரக்காற்று முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. அந்த சுதந்திரக்காற்றை எமது மக்கள் மீண்டும் சுவாசிக்க வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் அயராது உழைக்க வேண்டும். நன்றி தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் மகளிர் அமைப்பு டென்மார்க்