அமெரிக்க இராஜாங்கச் செயலர் அதிரடியாகப் பதவி நீக்கம்!

breaking

அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலராக, மத்திய புலனாய்வுப் முகவரகத்தின் (சிஐஏ) பணிப்பாளரான மைக் பொம்பியோ நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்த திடீர் நடவடிக்கை அமெரிக்காவில் மாத்திரமன்றி உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராஜாங்கச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்படுவது தொடர்பாக றெக்ஸ் ரில்லர்சனுக்கு முன்கூட்டிய எந்த அறிவிப்பையும் அமெரிக்க அதிபர் விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை, சிஐஏயின் புதிய பணிப்பாளராக ஹனா ஹஸ்பெல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிஐஏயின் முதலாவது பெண் பணிப்பாளராவார்.