ஜெனீவாவின் அமர்வு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வு தருமா?

breaking
08.03.19 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இரண்டுவருட நிறைவும் மூன்றாம் வருட தொடகத்தினையும் முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை நடத்தியுள்ளார்கள். தலையில் கறுப்பு துண்டுகட்டியவாறு பதாதைகளை ஏந்தியவாறான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்திற்கு முன்பாக வீதியில் நின்று கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள். ஓமந்தையில் கொடுத்த உறவுகள் எங்கே,நல்லாட்சி அரசிடம் எமக்கான நீதியினை பெற்றுத்தா சர்வதேசமே,மகளீர்தினத்தில் எங்களுக்கு கண்ணீர்தான் பரிசா,அப்பா என்று ஏங்கும் பச்சிளம் குழந்தைக்கு பதில் சொல் சர்வதேசமே,ஜெனீவாவின் அமர்வு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வு தருமா? போன்ற வசாககங்களை தாங்கியவாறு உறவுகளை பறிகொடுத்த பெற்றோர்கள் உறவினர்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிக்கொணரும் முகமாக சர்வதேச மகளீர் நாளான 08.03.19 அன்று கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.